பறவைக் காய்ச்சல் எதிரொலி:கோழிப் பண்ணைகளில் சுமார் 1 கோடி முட்டைகள் தேக்கம்
பறவைக் காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல்லில் உள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் ஒரு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
வடமாநிலங்களைத் தொடர்ந்து கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை சரிவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல கூடிய முட்டைகள் பாதியாக குறைந்துள்ளன.
இதன் காரணமாக நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்துள்ளனகடந்த ஐந்து நாட்களாக 5 ரூபாய் 10 காசுகளாக நீடித்து வந்த முட்டை விலை நேற்று ஒரே நாளில் 25 காசுகள் விலை குறைந்து 4 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments