சாலைகளை பனி மூடியதால் வீட்டுக்கு திரும்ப முடியாமல் பரிதவித்த தாயையும், சேயையும் 3.5 கிமீ சுமந்து பாதுகாப்பாக சேர்த்த ராணுவ வீரர்கள்

0 2003
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சோபூரில், பனியால் சாலை மூடியதன் காரணமாக, பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்த பெண்ணையும், அவரது பச்சிளங் குழந்தையையும் ராணுவ வீரர்கள் சுமந்து சென்று பாதுகாப்பாக சேர்த்தனர்.

பஸல்போரா என்ற இடத்தில் இருந்து துனிவார் என்ற இடம் வரை சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரம் அவர்கள் இந்த இருவரையும் சுமந்து சென்றனர்.

கிராம மக்களும், மருத்துவமனை செவிலியர் ஒருவரும் அவர்களுக்கு உதவியாக சென்றனர். ராணுவத்தினரின் இந்த மனிதாபிமானமிக்க உதவியை கிராமத்தினர் வெகுவாக பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments