ஸ்பெயினில் 2வது நாளாக ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஸ்பெயின் நாட்டில் 2வது நாளாக ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் சாலைகள் முழுவதும் பனியால் மூடி கிடந்தன.
தலைநகர் மாட்ரிட்டில் மைனசுக்கும் குறைவான நிலையில் வெப்பம் கீழே சென்றதால் பனி கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் முழுவதும் ஓரே பனி மயமாய் இருந்ததால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் காணப்பட்டது.
வீடுகள், கடைகள் என அனைத்து பகுதிகளிலும் பனி சூழ்ந்து இருந்த தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அங்கு இன்னும் சில தினங்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments