ஈரானிய தளபதி சுலைமானி கொல்லப்பட்ட வழக்கு : அதிபர் டிரம்புக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவு

0 2185
ஈரானிய தளபதி சுலைமானி கொல்லப்பட்ட வழக்கு : அதிபர் டிரம்புக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவு

ஈரானிய தளபதி சுலைமானியைக் கொன்ற வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய ஈராக் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் ஈராக் துணை ராணுவப் படையான ஹஷீத் அல்-ஷாபியின் வாகனங்கள் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய அந்தத் தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சி ராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவான காத்ஸ் படையின் தலைவர் காசிம் சுலைமானி உயிரிழந்தார்.

இத்தொடர்பாக கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து இந்த வழக்கில் அதிபர் டிரம்புக்கு கைது ஆணை பிறப்பித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments