சீனாவில் கடும் பனிப்பொழிவுக்கு இடையிலும் ஸ்ட்ரெச்சரில் நோயாளியை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று காப்பாற்றிய மருத்துவர்
சீனாவின் தென்மேற்கு மாகாணமான chongqing ல் கடும் பனிப்பொழிவுக்கு இடையிலும் நோயாளி ஒருவரை strecterல் வைத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று மருத்துவர் ஒருவர் உயிரை காப்பாற்றியுள்ளார்.
chengkou நகரில் உள்ள கிராமம் ஒன்றில் இளைஞர் ஒருவர் பக்கவாத நோயால் திடீரென பாதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சிகிச்சை பெற வந்த அவரை அங்கிருந்த மருத்துவர் ஒருவர் தன்னிடம் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததை அடுத்து ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மலைப்பாங்கான இடத்தில் இருந்து பனிச்சரிவில் இழுத்து சென்று சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து நலமுடன் உள்ளார். மருத்துவரின் இந்த மனிதாபிமான செயல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Comments