டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் திறக்க ஆம் ஆத்மி அரசு உத்தரவு
டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் திறக்க ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா காலத்து நடவடிக்கைகளுடன் மாணவர்கள் வகுப்புகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள ஆம் ஆத்மி அரசு, தலைநகரில் கொரோனா பரவல் குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வருடாந்திர தேர்வுகள் எழுதுவதன் மூலம் தேர்வு பெற்று பயிற்சி மருத்துவர்களாக சேர இயலும்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களும் பல் மருத்துவ மாணவர்களும் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி அரசு விளக்கம் அளித்துள்ளது.
Comments