புதிய வகை கொரோனா 22 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளது- உலக சுகாதார அமைப்பு தகவல்
மரபணு மாறிய புதிய வகை கொரோனா, 22 ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
டென்மார்க்கின் கோபன்கேகன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளுஜ் (Hans Kluge) அனைத்து வயது பிரிவினரையும் அக்கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கூட்டாக இணைந்து புதிய வகை கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தவில்லையெனில், அதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
Comments