மத்திய நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
மத்திய நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில், பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான தயாரிப்பு பணியில் மத்திய நிதியமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நிதி ஆயோக் சார்பில் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Comments