ஜம்மு-காஷ்மீரில் ரூ.28,400 கோடியில் புதிய தொழில் வளர்ச்சி திட்டம்- துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா பேட்டி
ஜம்மு - காஷ்மீரில் 28 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா காஷ்மீரில், முதன் முறையாக, குக்கிராமம் முதல் நகர்ப்புறம் வரை தொழில், வேலைவாய்ப்பு, முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்க, 28 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, தொழில் வளர்ச்சி திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
இதன் வாயிலாக உள்ளூரைச் சேர்ந்த, நான்கரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்த பகுதியில், சமத்துவ சமூக, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் கூறினார்.
Comments