ரயில்களில் ரத்தான முன்பதிவு டிக்கெட்டுக்கான தொகை திரும்ப பெறும் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

0 1378
ரயில்களில் ரத்தான முன்பதிவு டிக்கெட்டுக்கான தொகை திரும்ப பெறும் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

கொரோனா ஊரடங்கின் போது முன்பதிவு செய்யப்பட்டு ரத்தான டிக்கெட்டுகளுக்கான தொகையை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்பதிவு டிக்கெட் தொகையை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் ஆறு மாதத்தில் இருந்து 9 மாதங்களாக நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, ரயில்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்தவர்கள், ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments