உத்தரப்பிரதேசம்: கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொடூரமாகக் கொலை... தப்பியோடிய முக்கிய குற்றவாளியான பூசாரி கைது

0 2267
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொடூரமாகக் கொலை... தப்பியோடிய முக்கிய குற்றவாளியான பூசாரி கைது

த்தரப்பிரதேசத்தில் பதுவான் கிராமத்தில் அங்கன்வாடிப் பெண்ணை பலாத்காரம் செய்து தப்பியோடிய கோவில் அர்ச்சகர் சத்ய நாராயண் பக்கத்து கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மூன்று பேர் அங்கன்வாடி பெண் ஊழியரை கோவிலுக்குள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து மிகவும் கொடூரமான முறையில் நிர்பயா கொலையை நினைவுபடுத்தும் வகையில் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் இரண்டு பேர் உடனடியாக கைது செய்யப்பட்ட போதும் முக்கியக் குற்றவாளியான கோவில் அர்ச்சகர் சத்யநாராயண் தப்பிவிட்டார். இந்நிலையில் அவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே பெண்கள் தனியாக வீட்டை விட்டு செல்லக்கூடாது என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments