தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 12215
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 4  நாட்களுக்கு கனமழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மையம் விடுத்துள்ள அறிக்கையில், வருகிற 10 ஆம் தேதி அன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழையும்,தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் தேதி அன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமெனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments