செட்டப் ரவுடிகள் திமுக பிரமுகரின் ராஜதந்திரம் வீணானது..! கார் உடைந்தது தான் மிச்சம் D

0 13567
திருவள்ளூர் அருகே திமுக பிரமுகர் ஒருவர் தானே, தனது காரை செட்டப் ரவுடிகளை வைத்து தாக்கி உடைத்த சம்பவத்தில் சிக்கி உள்ளார்.

திருவள்ளூர் அருகே திமுக பிரமுகர் ஒருவர் தானே, தனது காரை செட்டப் ரவுடிகளை வைத்து தாக்கி உடைத்த சம்பவத்தில் சிக்கி உள்ளார்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுக்காப்புக்கு ஆசைப்பட்டு செய்த தாக்குதல் ராஜதந்திரம் வீணான பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. 

தன்னுடைய காரை உடைக்க தானே கூலிப்படை வைத்து சிசிடிவியால் போலீசில் சிக்கிக் கொண்ட திமுக பிரமுகர் கண்ணன் இவர் தான் ..!

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், சோழவரம் ஒன்றிய துணைத் தலைவருமான கருணாகரன்.

இவரது சகோதரர் கண்ணன் பெரியபாளையம் அருகே திருநிலை கிராமத்திற்கு ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக கடந்த 27-ம் தேதி காரில் சென்றார்.

கார், பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் கன்னிகைபேர் ஏரிக்கரை அருகே உள்ள வேகத்தடையில் சென்ற போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நாலு பேர் கொண்ட மர்ம நபர்கள் திடீரென காரை வழிமறித்து நிறுத்தி தாக்கினர்.

இதில் கார் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.

காரில் வந்த கண்ணன், டிரைவர் மணி ஆகியோர் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். இவர்களை மர்ம நபர்கள் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்றனர்.

வழியில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணி முடிந்து சுமார் 50 பேர் வெளியே வந்தவர்களிடம் காரிலிருந்து தப்பிய இருவரும் சரணடைந்தனர்.

இதனால் மர்ம கும்பல் செய்வதறியாது இருவரையும் விட்டு, விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த வக்கீல் ராஜா என்பவரை பிடித்து விசாரித்த போது, தாக்குதல் சம்பவமே ஒரு நாடகம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

கண்ணனுக்கு அமைச்சர்கள் போல கையில் துப்பாக்கியுடன் காவல் துறையின் பி.எஸ்.ஓ பாதுகாப்புடன் காரில் சுற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

அதற்கு என்ன செய்ய வேண்டும் என வக்கீல் ராஜாவை அணுகியுள்ளார். உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்று ராஜா கொடுத்த சினிமா ஸ்டண்ட் ஆலோசனையின்படி சில ரவுடிகளை செட்டப் செய்து கண்ணன், தனது காரை தாக்கியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வக்கீல் ராஜா மற்றும் தாக்குதல் நாடகத்தின் கூட்டாளிகளான மாதவரம் விவேக் என்கிற லியோ விவேக், அயனாவரம் பாலாஜி, ஐசிஎப் யுவராஜ்,கொளத்தூர் ஹரிஹரன்,கொளத்தூர் சக்திவேல் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஒரு போலீஸ் பாதுகாப்புக்கு ஆசைப்பட்ட கண்ணனை, பல போலீஸ் பணிபுரியும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் முறையாக விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் போலீஸ் பாதுகாப்புக்காக திமுக பிரமுகர் மேற்கொண்ட தாக்குதல் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணகி இறுதியில் அவரது கார் உடைந்தது நாசமானது தான் மிச்சம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments