நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டு... ஓடுராஜா..! அசத்தும் அமைச்சர்

0 5949
நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டு... ஓடுராஜா..! அசத்தும் அமைச்சர்

குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வமுள்ள அமைச்சரான ஜெயக்குமார் வீரர்களுடன் கால்பந்து விளையாடி ரசிகர்களை குதூகலப்படுத்தினார்

தமிழக அமைச்சர்களில் பல்வேறு விளையாட்டுக்கள் மீது தீராத ஆர்வம் கொண்டவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்..! எந்த ஒரு விளையாட்டை தொடங்கி வைக்க சென்றாலும் அந்த விளையாட்டை ஆடி பார்ப்பது அவரது அக்மார்க் ஸ்டைல்..!

அந்தவகையில் சென்னை ராயபுரம் ஸ்டான்லி நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களுக்கிடையிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்ற அமைச்சர் ஜெயக்குமார் கால்பந்து வீரராக அவதாரம் எடுத்தார்

வழக்கமாக கால்பந்து போட்டி தொடங்க விழாவில் பந்தை பெயருக்கு காலால் உதைத்து விட்டு செல்லும் தலைவர்களுக்கு மத்தியில், நீண்ட தூரம் பந்தை லாவகமாக தட்டிச்சென்று இறுதியில் அதனை அட்டகாசமான கோலாக மாற்றி அசத்தினார் ஜெயக்குமார்

அண்மையில் கூட தொண்டர்கள் புடை சூழ இரு சக்கரவாகனத்தின் பின்னால் நின்று கையில் கட்சி கொடியுடன் தன்னை இளம் தொண்டனாக காட்டிக் கொண்டு உற்சாகமாக வலம் வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது குறிப்பிடதக்கது..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments