வெள்ளப் பெருக்குடன் பாயும் ஆறுகள்... இரு மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை

0 5860
தொடரும் மழையால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள இரு அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் பல ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடரும் மழையால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள இரு அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் பல ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கன மழையால் மணிமுக்தா அணைக்கு வந்த 24 ஆயிரத்து 716 கன அடி தண்ணீரும், அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே திறந்து விடப்பட்டது. இதனால் மணிமுத்தா ஆற்றில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

கனமழை காரணமாகக் கோமுகி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால் வேப்பூர் அருகே சேதுராயன்குப்பம், மரூர் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து முடங்கியுள்ளது. 

தென்பெண்ணை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆபத்தை உணராமல் திருக்கோவிலூர் - அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தினர். அங்கு போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

விருத்தாசலம் பகுதியில் வெள்ளப் பெருக்கால் கரையோரம் இருந்த வீடுகள் மண்ணரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்தன. பாலத்தில் நின்று ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். 

சிறு ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் கடலூர் மாவட்டம் அறந்தாங்கி பா புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் குழந்தைகளுடன் அவதிப்பட்டு வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் மன்னம்பாடியிலிருந்து எடையூர் செல்லும் தரைப்பாலம் மற்றும் பெரம்பலூர் கிராமத்திலிருந்து எடையூர் செல்லும் தரை பாலம், உப்பு ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையின் காரணமாக ரோசனை ஏரி, கிடங்கல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீரானது குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments