விமானத்தில், வைரஸ் உள்ளிட்ட கிருமிகளை நீக்கும் பணிக்காக ரோபோ அறிமுகம்

0 2650
நாட்டிலேயே முதன்முறையாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், புற ஊதா கதிரியக்க நுட்பத்தின் அடிப்படையிலான, கொரோனா வைரஸ் உள்ளிட்ட கிருமி நீக்க ரோபோவை, ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், புற ஊதா கதிரியக்க நுட்பத்தின் அடிப்படையிலான, கொரோனா வைரஸ் உள்ளிட்ட கிருமி நீக்க ரோபோவை, ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் போயிங் 737-800 விமானத்தில், இந்த கிருமி நீக்க ரோபோ பயன்படுத்தப்பட்டது.

UV-C எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புற ஊதா கதிரியிக்க கிருமி நாசினி ரோபோ, விமான இருக்கைகள், அதன் அடிப்பகுதிகளில், கால் வைக்கும் இடங்கள், லக்கேஜ் வைக்கும் இடம் என அனைத்து பகுதிகளையும், கிருமி நீக்கம் செய்யும் ஆற்றல் கொண்டவையாகும்.

ஒரு பகுதியில், கிருமி நீக்கம் செய்ய வெறும் 4 நொடிகள் போதும் என்பதால், விரைவாக, கிருமி நீக்க தூய்மைப் பணிகளை மேற்கொள்ள முடியும் என, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments