போலீஸ் பாதுகாப்பு வாங்க போலி நாடகம் நடத்திய திமுக பிரமுகர்

0 8458
துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பி, திமுக பிரமுகர் ஒருவர் நடத்திய நாடகம் காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பி, திமுக பிரமுகர் ஒருவர் நடத்திய நாடகம் காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கருணாகரனின் சகோதரரான திமுக பிரமுகர் கண்ணன் வந்த காரை மறித்து, கடந்த 27 ஆம் தேதி, பெரியபாளையம் அருகே சிலர் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் கண்ணனே திட்டமிட்டு தாக்குதலுக்கு ஏற்பாடு செய்து தெரியவந்தது.

போலி தாக்குதலுக்கு திட்டம் போட்டு கொடுத்த சென்னை வழக்கறிஞர் ராஜா உள்பட 6 பேரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments