திருச்சானூர் கோவிலில் 7 மாதங்களுக்கு பின் வி.ஐ.பி. தரிசனம்

0 2209

7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜூன் மாதம் 8-ந்தேதியில் இருந்து வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் 7 மாதங்களுக்கு பிறகு கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கியது.

அதன்படி காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 7.30 மணி வரையிலும் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments