அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் போனஸ் அறிவிப்பு

0 4021
அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

2019-2020-ம் ஆண்டின் 240 நாட்கள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், அதற்கு குறைவாக பணிபுரிந்தோருக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதுநிலை மற்றும் முதுநிலையில்லாத அனைத்து கோயில் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments