சரக்கு ரயிலுக்கு என்ற தனி ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சரக்கு ரயிலுக்கு என்ற தனி ரயில் பாதை மற்றும் இரட்டை அடுக்கு சரக்கு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேற்கு ரயில்வே சார்பில் அரியானாவின் ரெவாரியில் இருந்து ராஜஸ்தானின் மதார் வரை 306 கி.மீட்டர் தூரத்திற்கு சரக்கு ரயில் போக்குவரத்திற்கு என்று தனி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரயில் பாதையில் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது, அட்டலி-கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு 1.5 கி.மீ நீள பெட்டக ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இரட்டை அடுக்கு பெட்டக ரயில், தற்போதைய ரயில்களை விட, நான்கு மடங்கு எண்ணிக்கையில் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது. அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இயக்கும்.
Comments