தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டில் கடந்த ஆண்டுகளில் 5 சதவீதம் பேர் கூட தேர்வு செய்யப்படவில்லை - மதுரை கிளை நீதிபதிகள்

0 3448

மிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டுகளில் 5 சதவீதம் பேர் கூட தேர்வு செய்யப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பும் போதும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற கோரிய வழக்கு நீதிபதிகள் M.M. சுந்தரேஷ், மற்றும் ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது "தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தான் அறிவிப்பாணையில் உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து TNPSC எந்த முறையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை தீர்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments