பிள்ளைகள் உதவவில்லையே என்ற ஏக்கத்தால் வயதான தம்பதி தற்கொலை

0 8648
பெரம்பலூரில் வயதான தம்பதியினர், அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியபட்டியை சேர்ந்தவர்கள் கண்ணன்-சரோஜா தம்பதி.

பெரம்பலூரில் வயதான தம்பதியினர், அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியபட்டியை சேர்ந்தவர்கள் கண்ணன்-சரோஜா தம்பதி.

10 ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு கண் பார்வையும் பறிபோனது. கணவர் கண்ணன் மட்டுமே, வேலைக்கும் சென்றுவிட்டு, மனைவியையும் தனியாக கவனித்து வந்துள்ளார்.

தம்பதியின் இரண்டு மகன்களும் கூலி வேலை மட்டுமே செய்து வருவதால், பெற்றோர்களுக்கு பெரிதாக உதவவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு கணவன், மனைவி இருவரும் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments