'இன்னும் ஓராண்டு முக கவசம் அணிவது கட்டாய தேவை' - மருத்துவ நிபுணர்கள்

0 4077
தடுப்பூசிகளால் கொரோனாவில் இருந்து 100 சதவிகித பாதுகாப்பு கிடைக்காது என்றும் முக கவசம் அணிவதன் மூலம் மட்டுமே அதில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தடுப்பூசிகளால் கொரோனாவில் இருந்து 100 சதவிகித பாதுகாப்பு கிடைக்காது என்றும் முக கவசம் அணிவதன் மூலம் மட்டுமே அதில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு பயன்பாட்டு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், வரும் 2022 துவக்கத்தில் மட்டுமே பெரும்பாலான மக்களை அது சென்றடையும் என மும்பையின் பிரபல ஜஸ்லோக் மற்றும் ஹிந்துஜா மருத்துவமனைகளின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி போட்டாலும் உடலில் அது நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்த இரண்டு வாரங்கள் ஆகும். அதற்குள் அந்த நபருக்கு மற்றவர்களிடம் இருந்து வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இன்னும் ஒரு வருடத்திற்கு முக கவசத்திற்கு விடை கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments