’சர்ச்சைக்குரிய ட்விட்; பலத்த கண்டனங்கள்’ உடனடியாக ட்விட்டை நீக்கிய இவாங்கா டிரம்ப்
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் வன்முறையில் ஈடுபட்டவர்களை தேச பக்தர்கள் என வர்ணித்து டுவிட் செய்த இவாங்கா டிரம்ப், அதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து சில மணி நேரங்களில் அந்த டுவிட்டை நீக்கி விட்டார்.
சர்ச்சைக்குரிய டுவிட்டை நீக்கிய அவர், தமது தந்தையான டிரம்பின் டுவிட்டான அமைதியாக இருங்கள் என்பதை மறுடுவிட் செய்துள்ளார்.
No. Peaceful protest is patriotic. Violence is unacceptable and must be condemned in the strongest terms. https://t.co/GwngZTqzTH
அதிலும், அமெரிக்க தேச பக்தர்களே, சட்டத்தை மீறும் எந்த செயலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ள இவாங்கா, வன்முறையை உடனே நிறுத்துமாறு டிரம்ப் ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments