முதியோர் தபால் வாக்கு : தடை விதிக்கக்கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1601

80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க அனுமதித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

விசாரணையின் போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,  இந்த புதிய நடைமுறை காரணமாக ரகசியமாக வாக்களிக்கும் முறை பாதிக்கப்படும் என்று வாதிட்டார். 

வாதங்களை கேட்ட நீதிபதிகள்,  தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பு கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டனர். பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments