கொரோனா தடுப்பூசி மைய செயல்பாடு குறித்து ஆய்வு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாளை தமிழகம் வருகை

0 2249
கொரோனா தடுப்பூசி மைய செயல்பாடு குறித்து ஆய்வு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாளை தமிழகம் வருகை

கொரோனா தடுப்பூசி மைய செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய நாளை தமிழகம் வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடைபெறவுள்ளது. இதனை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகம் வருகிறார்.

கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் தடுப்பூசி மையத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அவர் ஆலோசனையும் நடத்துகிறார்.

தொடர்ந்து, சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள மத்திய மருந்து கிடங்கையும் அவர் பார்வையிடவுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments