போலிப் பணி நியமன ஆணை தயாரித்த வழக்கில் கைதான 2 பேரிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை
போலிப் பணி நியமன ஆணை தயாரித்து மோசடி செய்த வழக்கில் கைதான அரசு ஊழியர் உட்பட இருவரை மூன்று நாள் காவலில் எடுத்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி நியமன ஆணை தயாரித்த வழக்கில் தலைமைச் செயலக ஊழியர் ஞானசேகர், நாகேந்திர ராவ் ஆகியோர் கடந்த 5ஆம் தேதி கைதாகினர்.
இவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கச் சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்ததால் இருவரிடமும் தனித்தனியாகச் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மோசடியில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என்றும், பணத்தை யாருக்கெல்லாம் கொடுத்துள்ளனர் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments