ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக காங். கட்சியினர் நாளை போராட்டம்: ஆளுநர் மாளிகைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

0 1303
ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக காங். கட்சியினர் நாளை போராட்டம்: ஆளுநர் மாளிகைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆளுநர் மாளிகைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஆளுநரை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் புதுச்சேரி மாநில பா.ஜ.க. சார்பில் தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்-அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக ஆளுநர் மாளிகை, சட்டசபை வளாகம், தலைமை செயலகம் பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு மத்திய படை குவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments