நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்தின் ஜாமின் மனு குறித்து காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

0 1977

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த ஜாமின் மனுவிற்கு பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்ரா மீது தான் சந்தேகம் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக  காவல் துறையினர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது என ஹேமந்த் தனது மனுவில்  குறிப்பிட்டுள்ளார். ஆர்.டி.ஓ விசாரணையில் வரதட்சணை கொடுமை எதுவும் நடக்கவில்லை  என தெரியவந்துள்ளதையும் ஹேம்நாத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், பதிலளிக்க இரு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை அடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், பிரேத பரிசோதனை அறிக்கை, ஆர்.டி.ஓ அறிக்கை ஆகியவற்றை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments