அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு உலக நாடுகள் கண்டனம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முறையான மற்றும் அமைதியான அதிகாரப் பரிமாற்றம் தொடர வேண்டும் என்றும், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வாஷிங்டனில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என வினவியுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டரில், ஜனநாயகத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரும்பத் தகாத நிகழ்வுகள் அரங்கேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிப்பதை டிரம்ப் ஆதரவாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஹீக்கோ மாஸ் தெரிவித்துள்ளார். இதேபோல் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments