கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் - மியாட் மருத்துவமனை

0 1401

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியாகி, அமைச்சர் காமராஜ் கடந்த 5-ம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இருப்பினும், சி.டி. ஸ்கேனில் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஒரு அறையில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவே அவருக்கு போதுமானது என்பதால், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என மியாட் மருத்துவமனை கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments