புவி வெப்பநிலை உயர்வால் புயல்கள் உருவாவது அதிகரிப்பு - சூழலியலாளர்கள் தகவல்

0 1867
புவி வெப்பநிலை உயர்வால் புயல்கள் உருவாவது அதிகரிப்பு - சூழலியலாளர்கள் தகவல்

புவி வெப்பநிலை உயர்வால் புயல்கள் உருவாவது அதிகரித்துள்ளதாகச் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1901ஆம் ஆண்டு முதல் இயல்பைவிட வெப்பம் மிகுந்தவை என 15 ஆண்டுகள் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றில் 2006 முதல் 2020 வரை மட்டுமே 12 ஆண்டுகள் அதிக வெப்பநிலை கொண்டவையாக இருந்துள்ளன.

பூமியின் வெப்பநிலை இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமானால், இயல்பை விட 7 விழுக்காடு அதிகமாக நீர் ஆவியாகிறது.

2 டிகிரி செல்சியஸ் அதிகமானால் உருவாகும் புயலின் கடுமை 13 விழுக்காடு அதிகமாகிறது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய கடற்பரப்பில் மட்டும் ஐந்து புயல்கள் உருவாகியுள்ளன.

அவற்றில் அம்பன் சூப்பர் புயல் உருவான போது கடலின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாக இருந்துள்ளது.

கடந்த 120 ஆண்டுகளில் சராசரியாகத் தமிழகத்துக்கு மூன்றாண்டுக்கு ஒரு புயல் வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு புயல் என்னும் குறுகிய கால அளவில் வந்துள்ளதாகச் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments