இமாச்சலப் பிரதேசத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகளுக்கு பறவை காய்ச்சல்... உள்ளூர் பறவைகளுக்கும் பரவி இருப்பதாக தகவல்
இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளில் ஏராளமான பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.
இதனால் ஆங்காங்கே கொத்து கொத்தாக பறவைகள் இறந்து கிடக்கின்றன. இதில் உள்ளூர் பறவைகளுக்கும் வெளிநாட்டுப் பறவைகள் மூலமாக பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பறவைகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் மூலமாக இந்த பறவைக் காய்ச்சல் நான்கு மாநிலங்களுக்குப் பரவியுள்ளது. பாதிப்பு உள்ள மாநிலங்களில் சிக்கன், முட்டைகள் போன்றவை உண்ண வேண்டாம் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Comments