அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட களேபரங்களைத் தொடர்ந்து ஃபேஸ் புக், ட்விட்டர், யூ டியூப் வலைதளங்கள் சிலமணி நேரம் முடக்கம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட களேபரங்களைத் தொடர்ந்து ஃபேஸ் புக், ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தங்கள் பக்கங்களை சிறிது நேரம் முடக்கி வைத்தன.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை நடவாத நிகழ்வாக டிரம்ப் கட்சியின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, தடைகளைத் தகர்த்து உள்ளே நுழைந்தனர்.
இதனால் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் மிகப்பெரும் சமூக ஊடகங்களான ஃபேஸ் புக், ட்விட்டர், யூ டியூப் ஆகியவற்றில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதையடுத்து இந்த சமூக வலைத்தளங்கள் சில மணி நேரம் முடக்கி வைக்கப்பட்டன. ட்விட்டர் நிறுவனம் டிரம்பின் கணக்குகளை 12 மணி நேரம் முடக்கி வைத்துள்ளது.
Comments