அமெரிக்காவில் தற்போது நடந்த தேர்தல் மோசடியான தேர்தல் - அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் நடந்தது மோசடியான தேர்தல் என்று தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசிய அவர், மக்களின் வலியைப் புரிந்து கொண்டிருப்பதாகவும், சட்டம் ஒழுங்குக்கு மதிப்பளித்து அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் தற்போது நடந்த தேர்தல் மோசடியான தேர்தல் என்று வர்ணித்த டிரம்ப், தனது ஆதரவாளர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
Comments