புகைபிடிப்பவர்களை கொரோனா அதிகம் தாக்குவதாக ஆய்வில் தகவல்
புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குவதற்கு அதிக ஆபத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து லண்டன் கிங் கல்லூரி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், கொரேனா தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் புகை பிடிப்பவர்களாக இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் புகைப்பிடிப்பவர்களிடம் அதிகம் காணப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புகைப்பிடிப்பவர்களுக்கு வாசனை இழப்பு, உணவைத் தவிர்ப்பது, வயிற்றுப்போக்கு, சோர்வு, குழப்பம் அல்லது தசை வலி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட உபாதைகள் இருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Comments