மும்பையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான 123 இணையதளங்கள் உருவாக்கி 10,000 பேரிடம் மோசடி

0 1176
மும்பையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான 123 இணையதளங்கள் உருவாக்கி 10,000 பேரிடம் மோசடி

மும்பையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான 123  இணையதளங்கள் உருவாக்கி , பத்தாயிரம் பேரிடம் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

சமூக ஊடகங்கள் வாயிலாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிட்டு ஆசை காட்டிய இந்த கும்பல் பத்தாயிரம் பேரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

கேஸ் டீலர் உரிமம் பெற்றுத்தருவதாக கூறியதை நம்பி மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தைப் பறிகொடுத்த ஒருவர் புகார் அளித்ததன் பேரில் இந்த கும்பலை சைபர் போலீசார் கைது செய்தனர்.

இக்கும்பலைச் சேர்ந்த மேலும் சிலர் பாட்னாவிலும்  மேற்குவங்கத்திலும் இருப்பதாக சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments