ஐதராபாத் 50 ஏக்கர் நில விவகாரம் : ஆந்திர முன்னாள் பெண் அமைச்சர் கணவருடன் கைது
ஐதராபாத் 50 ஏக்கர் நில விவகாரத்தில் தெலுங்குதேச கட்சியைச் சேர்ந்த ஆந்திர முன்னாள் பெண் அமைச்சர், கணவருடன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் நெருங்கிய உறவினரான இந்திய பேட்மிண்டன் வீரர் பிரவீன் ராவ், அவரது சகோதரர்கள் நவீன் ராவ், சுனில் ராவ் ஆகியோருக்கு சொந்தமான நில விவகாரத்தில் ஆந்திர முன்னாள் அமைச்சர் அகில பிரியாவும், அவரது கணவர் பார்கவ் ரெட்டியும் தலையிட்டு, பஞ்சாயத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நேற்றிரவு ஐதராபாத்தில் உள்ள பிரவீன் ராவ் வீட்டுக்கு 2 கார்களில் வந்த 15 பேர் கும்பல், பெண்களை ஒரு தனி அறையில் வைத்து பூட்டி விட்டு. சகோதரர்கள் மூவரையும் காரில் கடத்தி சென்றனர். பிடிபட்ட 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, தெலங்கானா காவல்துறை, கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.
Comments