தடாகம் மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1859

கோவை தடாகம் மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலை பகுதி பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்  சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை அகற்றக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், செங்கல் சூளைகளையும் அகற்ற தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்,  அதுகுறித்த அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்யும்படி தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments