சீன அத்துமீறல் முறியடிப்பு.. உடனுக்குடன் பதிலடி.! மைக்ரோவேவ் ஆயுதம் உண்மையா?

0 6188
கிழக்கு லடாக் எல்லையில், சீன ராணுவம், பலமுறை அத்துமீற முயன்றபோதும், அனுமதிக்கப்படாத ஆயுதங்களை பயன்படுத்தியபோதும், இந்திய ராணுவத்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு, உரிய பாடம் புகட்டப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில், சீன ராணுவம், பலமுறை அத்துமீற முயன்றபோதும், அனுமதிக்கப்படாத ஆயுதங்களை பயன்படுத்தியபோதும், இந்திய ராணுவத்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு, உரிய பாடம் புகட்டப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், வருடாந்திர ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 8 மாதங்களாக நீடிக்கும் லடாக் எல்லை பிரச்சினை தொடர்பான விவகாரம் குறித்து, விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் அத்துமீற முயன்றபோது, இந்திய ராணுவ துருப்புகள் போராடி தடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அப்போது, இந்திய வீரர்கள் 20 பேர் உயிர்த் தியாகம் செய்ததாகவும், ஆனால், நம்மை விட, சீன இராணுவம் பெரியளவிலான உயிரிழப்புகளை சந்தித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப் படையின் உதவியுடன், அதிநவீன பீரங்கிகள், இலகுரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உடனடியாக குவிக்கப்பட்டதாக, கூறப்பட்டுள்ளது.

பாங்காங் ஏரி, தெற்கு கரை பகுதியில், ஆகஸ்ட் 28, 29ஆம் தேதிகளில், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் முன்கூட்டியே தடுக்கப்பட்டு, சீன துருப்புகள் ஓட, ஓட விரட்டி அடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

அவ்வப்போது சீன இராணுவம் அத்துமீற முயற்சிக்கும் சமயங்களில் எல்லாம், விரிவான விவரிக்க முடியாத அளவிற்கு, கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு, இந்திய ஆளுகையை, நமது இராணுவம் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரஸ்பர ஒப்பந்தங்களை மீறி, சீன இராணுவம், யுத்த காலங்களில் கூட அனுமதிக்கப்படாத, வழக்கத்திற்கு மாறான ஆயுதங்களை பயன்படுத்தியபோதும், இந்திய இராணுவம், தனது பாதுகாப்பு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனா தனது இராணுவத்தின் மூலம், லடாக் எல்லையில் அத்துமீறல் போக்கையும், வரம்பு மீறிய செயல்களை நிறுத்திக் கொள்ளாத வரை, படைவிலக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments