பறவைக் காய்ச்சல் குறித்த அச்சம் : முட்டை, இறைச்சியை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும் - அமைச்சர் கிரிராஜ் சிங்

0 2859

றவைக் காய்ச்சல் குறித்த அச்சம் பரவி வரும் நிலையில், முட்டைகளையும் இறைச்சியையும் நன்றாக வேகவைத்த பின் உண்ணும்படி மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய கோழிகளின் முட்டை, இறைச்சி ஆகியவற்றால் மனிதர்களுக்குப் பறவைக்காய்ச்சல் பரவக் கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது. இதைத் தவிர்க்க மத்தியக் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், முட்டைகளையும், இறைச்சியையும் நன்றாக வேக வைத்தபின் உண்ணும்படி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் பறவைக் காய்ச்சல் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments