திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது தற்கொலைக்கு சமம் - நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவர் வேண்டுகோள்
கொரோனா சூழலில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிப்பது தற்கொலைக்கு சமம் என நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் தமிழக அரசே, முன்கள பணியாளர்களாகிய நாங்கள் மிகவும் சோர்வாக உள்ளோம், மூச்சுவிட நேரம் வேண்டும், சிலரின் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் இயற்றுபவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், மெதுவாக அணையும் தீயை தூண்டிவிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
இவரது கருத்து சமூக வலைதளங்களில் பலரது கவனங்களை ஈர்த்துள்ளது.
Comments