கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யக் கோரிய வழக்கு : ரிசர்வ் வங்கி, கூகுள் நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ஆன்லைனின் கடன் வழங்கும் செயலிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து ரிசர்வ் வங்கிக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கலான பொதுநல மனுவில், ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் ஆன்லைன் கடன் செயலிகள் அதிக வட்டி வசூலிப்பதோடு, எந்தவிதமான சட்டதிட்டங்களையும் பின்பற்றுவதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் விதிமுறைகளை அவர்களே உருவாக்கிக்கொண்டு, கடன்களை வசூல் செய்வதில் அங்கீகரிக்க முடியாத முறைகளைப் பின்பற்றுகின்றனர் எனக் கூறினர்.
இது போல கடன் வாங்குவோர் மூலமாக சமூக விரோதக் கூறுகள் நாடுகளுக்குள் உட்புகும் வாய்ப்பிருக்கலாம் என தோன்றுகிறது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர், கூகுள் நிறுவனம் மற்றும் மத்திய நிதித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Comments