உருமாறிய கொரோனா தொற்றால் இந்தியாவில் 71 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை 33ஆயிரம் பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்களைத் தனிமைப்படுத்தி, கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எனக் கருதப்படுவோரிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில், உருமாறிய கொரோனா தொற்றால் இதுவரை 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments