சீனாவில் ரூ.1700 கோடி அளவுக்கு ஊழல் செய்த முன்னாள் வங்கி தலைவருக்கு மரண தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு
சீனாவில், லஞ்சம், பலதார மணம் மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் வங்கித் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
China Huarong Asset Management என்ற வங்கியின் தலைவராக இருந்த லாய் ஜியாமின் என்பவர் கடந்த 2018 ல் சுமார் 1700 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
அதில் தீர்ப்பளித்த டியான்ஜின் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
சீனாவின் மிகவும் ஊழல்வாதியான நிதித்துறை அதிகாரி என அழைக்கப்படும் இவர் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்கு பெரும் ஆபத்து விளைவித்தார் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் விஷ ஊசி போடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.
Comments