கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய லஞ்சம் வாங்கியவர்.. மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சடுகுடு!

0 20485

ஆவடி மாநகராட்சி வளாகத்தில் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரின் உதவியாளர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட அவரை அலுவலக வளாகத்திலேயே சுற்றி வளைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

 ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் பில்கலெக்டராக கார்த்திக் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவரிடத்தில் உதவியாளராக வின்சென்ட் என்பவர் இருக்கிறார். பட்டாபிராமை சேர்ந்த கலைச்செல்வி என்வரின் காலிமனைக்கு வரிவிதிப்பது தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்க்க பில் கலெக்டர் கார்த்திக் ரூ. 5,000 லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், அந்த தொகையை தன் உதவியாளர் வின்சென்டிடத்தில் கொடுக்க கார்த்திக் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கலைச்செல்வி லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், போலீஸார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வின்சென்ட் வசம் கலைச் செல்வி கொடுத்தார். அப்போது, அதிரடியாக புகுந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வின்சென்டை கைது செய்ய முயன்றனர். ஆனால், சுதாரித்துக் கொண்ட வின்சென்ட் போலீஸார் பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடினார். மாநகராட்சி அலுவலகத்தில் சேசிங் செய்த போலீஸார்அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் 30 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

லஞ்சப்பணத்துக்கு ஆசைப்பட்ட கார்த்திக், வின்சென்ட் இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments