கொரோனா குறித்து ஆராய ஊகான் செல்லவிருந்த WHO குழுவை அனுமதிக்க சீனா மறுப்பது ஏமாற்றமளிக்கிறது - WHO தலைவர்

0 2801
கொரோனா எப்படி பரவியது என்பதை ஆராயும் உலக சுகாதார நிறுவன நிபுணர்களை, நாட்டுக்குள் அனுமதிக்க சீனா மறுப்பது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என WHO தலைவர் கூறியுள்ளார்.

கொரோனா எப்படி பரவியது என்பதை ஆராயும் உலக சுகாதார நிறுவன நிபுணர்களை, நாட்டுக்குள் அனுமதிக்க சீனா மறுப்பது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என WHO தலைவர் கூறியுள்ளார்.

ஊகானில் கொரோனா வைரஸ் பரவியது குறித்து ஆராய மூத்த மருத்துவ விஞ்ஞானி பீட்டர் பென் எம்பரேக் (Peter Ben Embarek) தலைமையில், பல நாடுகளை சேர்ந்த 10 நிபுணர்கள் அடங்கிய குழுவை உலக சுகாதார நிறுவனம் நியமித்துள்ளது.

இந்த மாதம் அவர்கள் ஊகானுக்கு செல்ல வேண்டும் என திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி இதுவரை சீனாவிடம் இருந்து கிடைக்கவில்லை.

இந்த 10 பேரில் சீனாவுக்கு புறப்பட்ட இரண்டு பேரில் ஒருவரை சீனா திருப்பி அனுப்பி விட்டது. மற்றவருக்கும் அனுமதி கிடைக்காத தால் அவர் தற்காலிகமாக வேறு ஒரு நாட்டில் தங்கி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments