கண்டுகொள்ளாத பெரியவர்கள்; கரம் கோர்த்த இரட்டைச் செல்வங்கள் ...வீடு சேர்ந்த மூதாட்டி!

0 4084

புதுக்கோட்டை அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க சென்று வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டியை வீடு திரும்ப உதவி செய்த இரட்டையர்களுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. கணவரை இழந்த சுப்புலட்சுமி தன் மகளுடன் வசித்து வருகிறார். தற்போது, 74 வயதான நிலையில் நடக்க முடியாத காரணத்தினால் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாமல் சுப்புலட்சுமி தவித்து வந்துள்ளார். மேலும் , மூதாட்டி தமிழக அரசு வழங்கும் ரூ. 2,500 பெற அவரின் கைரேகை பதிவு செய்ய வேண்டுமென்று கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்து தன் மகளுடன் உதவியுடன் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ரேசன் கடைக்கு நடந்து சென்று சுப்புலட்சுமி தன் கைரேகையை பதிவு செய்துள்ளார்.

பின்னர், வீட்டுக்கு திரும்புகையில் சுப்புலட்சுமி நடக்க முடியாமல் சாலையோரத்தில் படுத்து விட்டார். இதனால், தாயை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாமல் மகள் தவித்து கொண்டிருந்தார். பெரியவர்கள் யாரும் இவர்களை கண்டு கொள்ளாத நிலையில், மூதாட்டியின் நிலையை கண்டு அந்த பகுதியில் வசிக்கும் வீரமணி என்பரின் மகன்களான இரட்டையர்கள் நிதின், நிதிஷ் என்ற சிறுவர்கள் கண்டு மனம் கலங்கினர். பின்னர், மூதாட்டிக்கு உதவ முடிவு செய்து தன் தந்தை வீட்டில் வைத்திருந்த தள்ளு வண்டியை எடுத்து வந்தனர். பிறகு, மூதாட்டியை அதில் ஏற்றி சென்று வீட்டில் விட்டு வந்தனர். மூதாட்டிக்கு உதவிய சிறுவர்களை அக்கம் பக்கத்தினர் மனதார பாராட்டினர். மேலும், சுப்புலட்சுமி போன்ற முதியவர்களுக்கு வீட்டுக்கே சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினால் என்ன ? என்கிற கேள்வியும் இந்த இடத்தில் எழத்தான் செய்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY