சென்னையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - காவல்துறையினர் தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

0 3529
சென்னையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - காவல்துறையினர் தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

சென்னையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கடந்த 30ம் தேதி அம்பேத்கார் காலனி பகுதியில் குடிபோதையில் கார் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் சூர்யாவை அவரது வீட்டில் இருந்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கை கால் வீக்கத்துடன் இருந்த சூர்யாவை நேற்றிரவு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்ற போது அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments