குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமம் 9 மாதங்களுக்கு பிறகு பார்வையாளர்களுக்காக மீண்டும் திறப்பு
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமம் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாதின் புறநகர் பகுதியில் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் இந்த ஆசிரமத்தை மகாத்மா காந்தி அமைத்தார். இந்த இடம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆஸ்ரமம் கொரோனா காரணமாக கடந்த மார்ச் 20ந்தேதி முதல் மூடப்பட்டது. தற்போது இந்த ஆசிரமம் கடந்த திங்கள் முதல் திறக்கப்பட்டதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர்.
இதற்கிடையில் ஆசிரம த்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Comments